/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை: சமைத்த கோழிக்கறி, முட்டை சாப்பிடலாம்
/
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை: சமைத்த கோழிக்கறி, முட்டை சாப்பிடலாம்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை: சமைத்த கோழிக்கறி, முட்டை சாப்பிடலாம்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை: சமைத்த கோழிக்கறி, முட்டை சாப்பிடலாம்
ADDED : ஏப் 23, 2024 06:38 AM
தேனி: 'தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனவே, நன்கு சமைத்த கோழிக்கறி, வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம்', என தேனி கால்நடைத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா கூறியதாவது:
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை இங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. தேனி கால்நடைத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா கூறியதாவது:
கோழிகள், வாத்துக்கள் தீவனம் உட்கொள்ளாமல் சோர்வுடன் இருத்தல், தலை வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், முட்டை உற்பத்தி திடீர் குறைவு, 100 சதவீத கோழிகள் இறப்பு, இறந்த கோழிகளில் உடல் உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது என அறிகுறிகள் இருந்தாலும், அதிகளவு இறப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை உதவி டாக்டருக்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.
தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் இல்லை. எனவே, நன்கு சமைத்த கோழிக்கறி, வேகவைத்த முட்டைகளை தைரியமாக சாப்பிடலாம். ஒரு வேளை நாம் வாங்கும் இறைச்சியில் நோய்க்கிருமி இருந்தாலும், சமைக்கும் போது 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைரஸ் கிருமி அழிந்துவிடும்.
அரை வேக்காட்டில் சமைத்த கறி, முட்டைகளை உண்ணக்கூடாது. முழுமையாக அவித்த முட்டை, பொறித்த ஆம்லெட் உண்ணலாம்.
பீதி அடைய தேவையில்லை இந்நோய் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.
தடுக்கும் முறைகள்:
இந்நோய் கோழிகளையும் பாதிக்காமல் இருக்க நீங்கள் வளர்க்கும் கோழிகள் உங்கள் வீட்டு எல்லையை தாண்டி வெளியில் சென்று மேய்ந்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீவனம், தண்ணீர் வேறு கோழிகள், பறவைகள் பங்கிட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டைச் சுற்றிலும் சுவர் அல்லது முள்வேலி அமைத்துக் கொள்வது அவசியம்.
கோழி, வாத்து, வான்கோழி, கூஸ் வாத்து போன்று பல்வேறு பறவைகளை ஒன்றாக வளர்க்க வேண்டாம். கோழிக்கூண்டு சுத்தம் செய்யும் போது முகக்கவசம், துணியால் மூடிக் கொள்ளவும். சுத்தம் செய்த பின் கைகளை நன்கு சோப்பு தேய்த்து கழுவ வேண்டும்.
கோழி, கோழி இறைச்சியைக் கையாளும் போதும், அதன் பின்பும் நன்கு சோப்பு தேய்த்து கழுவுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

