/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடமலைகுடி தத்தெடுக்கப்படும் பா.ஜ.கூட்டணி வேட்பாளர் உறுதி
/
இடமலைகுடி தத்தெடுக்கப்படும் பா.ஜ.கூட்டணி வேட்பாளர் உறுதி
இடமலைகுடி தத்தெடுக்கப்படும் பா.ஜ.கூட்டணி வேட்பாளர் உறுதி
இடமலைகுடி தத்தெடுக்கப்படும் பா.ஜ.கூட்டணி வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 16, 2024 04:51 AM
மூணாறு: மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சியை தத்தெடுத்தப்படும், என பா.ஜ.கூட்டணி வேட்பாளர் சங்கீதா தெரிவித்தார்.
இடுக்கி லோக்சபா தொகுதியில் பா.ஜ. கூட்டணியில் பி.டி.ஜே.எஸ். அமைப்பைச் சேர்ந்த சங்கீதா போட்டியிடுகிறார்.
அவர், மூணாறு அருகே மலைவாழ் மக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இடமலைகுடி ஊராட்சியில் ஓட்டு சேகரித்தார். அங்குள்ள சொசைட்டி குடியில் மலைவாழ் மக்களிடம் ஓட்டு சேகரித்தபோது கூறியதாவது, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு செயல்படுத்திய ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் இடமலைகுடி ஊராட்சி தத்தெடுக்கப்படும்.
அத்திட்டத்தில் எம்.பி., ஒரு ஊராட்சியை தத்தெடுத்து வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தலாம். தற்போதைய காங்கிரஸ் எம்.பி., துரதிஷ்டவசமாக தொகுதியில் ஒரு ஊராட்சியை கூட தத்தெடுக்க தயாராகவில்லை. முன்னாள் எம்.பி. கஞ்சிகுழி ஊராட்சியை தத்தெடுத்தும் எவ்வித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை, என்றார்.
அஞ்சலி : இடமலைகுடி ஊராட்சியில் இருந்து திரும்புகையில் ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக.6ல் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களை அடக்கம் செய்த இடத்தில் வேட்பாளர் அஞ்சலி செலுத்தினார்.

