/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னாள் எம்.எல்.ஏ.வை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள் தேவிகுளம் தொகுதியில் பரபரப்பு
/
முன்னாள் எம்.எல்.ஏ.வை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள் தேவிகுளம் தொகுதியில் பரபரப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.வை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள் தேவிகுளம் தொகுதியில் பரபரப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.வை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள் தேவிகுளம் தொகுதியில் பரபரப்பு
ADDED : மே 07, 2024 05:54 AM
மூணாறு: தேவிகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரனை பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்ததால் மீண்டும் அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தமிழர் இருந்து வருகின்றனர். அதன்படி மா. கம்யூ.,வைச் சேர்ந்த ராஜேந்திரன் 2006 முதல் 2021 வரை தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த சட்ட சபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்ததால் கட்சி உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளையும் இழந்தார்.
தொகுதியில் தமிழர்கள் உள்பட அனைத்து மக்களிடமும் செல்வாக்கு மிக்க ராஜேந்திரனின் மீதான நடவடிக்கை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் இழப்பாக கட்சி மேலிடம் கருதியது. அவரை மீண்டும் கட்சியில் இணைக்க மேலிடம் முயன்றது.
மா.கம்யூ., மாநில செயலாளர் , மாவட்ட முக்கிய பிரமுகர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து செயல்படுமாறு ராஜேந்திரனை வற்புறுத்தினர். அதன்படி மூணாறில் மார்ச் 17ல் இடது சாரி கூட்டணி சார்பில் நடந்த இடுக்கி லோக்சபா தேர்தல் பொதுகூட்டத்தில் ராஜேந்திரன் பங்கேற்றார்.
அப்போது அவரை கட்சியில் சில முக்கியஸ்தர்கள் உதாசினபடுத்தும் வகையில் நடந்ததால் பொது கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.இந்நிலையில் அவர் மார்ச் 20ல் டில்லியில் பா.ஜ., கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ்ஜவடேகரை சந்தித்தார். லோக்சபா தேர்தல் நேரத்தில் அந்த சந்திப்பு மா.கம்யூ., கட்சியினர் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் பா.ஜ.,வில் இணைவது குறித்து ராஜேந்திரன் மவுனம் காத்து வருகிறார்.
இதனிடையே பா.ஜ., மத்திய மண்டல தலைவர் ஹரி, மாநில துணைத் தலைவர் பிரமிளாதேவி, இடுக்கி மாவட்ட தலைவர் அஜி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரனை அவரது வீட்டில் சந்தித்தனர்.
அவர் கூறுகையில் மூணாறு அருகே கிராம்ஸ்லாண்ட் கொரண்டிக்காடு பகுதியில் ஏப்.18ல் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுமியின் கை முறிந்தது. அந்த வழக்கின் நிலை குறித்து பா.ஜ., நிர்வாகிகள் என்னிடம் கேட்டறிந்தனர். அரசியல் தொடர்பாக வேறு எதுவும் பேசவில்லை என்றார்.