/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக் இடமாற்றம் கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் இடமாற்றம் கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 05:36 AM
கம்பம்: கம்பம் ஏகலூத்து ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏக லூத்து ரோட்டில் டாஸ்மாக் கடையில் சமீபத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் இறந்தார்.
இங்கு அடிக்கடி தகராறுகள் ஏற்படுவதால் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற பெண்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து கடை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பார்க் ரோட்டில் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் பா.ஜ. தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் போடப்பட்டது. நகர் பொருளாளர் விஜி நன்றி கூறினார்.