/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
/
அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 09, 2024 12:34 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி 15வது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த வார்டில் பொது மக்களின் தண்ணீர் தேவைக்காக பேரூராட்சி மூலம் சமீபத்தில் புதிய போர்வெல் அமைக்கப்பட்டது. இந்த போர்வெல்லுக்கு அருகில் சில அடிகள் உள்ள இடத்தில் 16வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்பாண்டி தனது சொந்த பயன்பாட்டிற்கு புதிய போர்வெல் அமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்தினர். பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும், 15 வது வார்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைப்பின் போது பழுதடைந்த குடிநீர் குழாய் மற்றும் தெருக்களில் உள்ள மேடு, பள்ளங்களை சரி செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பேரூராட்சி தலைமை எழுத்தர் ஷியோகான், சுகாதார ஆய்வாளர் கணேசன், வார்டு கவுன்சிலர்கள் ரேணுகா, சுரேஷ்பாண்டி, ராமசாமி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர்.