/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு
/
கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஜூலை 06, 2024 05:57 AM
தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், உதிரம் கொடுப்போம் இன்னுயிர் காப்போம்' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கோமதி வரவேற்றார்.
உறவின்முறை துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் சுசிலாசங்கர், சரண்யா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி பேசினர்.
'உதிரம் கொடுப்போம், இன்னுயிர் காப்போம்' திட்ட கல்லுாரி துாதுவர் சாரதா, 50 முறை ரத்ததானம் வழங்கி உள்ளதாகவும், எவ்வித பாதிப்பும் இல்லை என, அனுபவங்களை பகிர்ந்தார்.
ஆண்டிபட்டி இ.எஸ்.ஐ., மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஞ்சனா ரேகா ரத்ததானம் பற்றி விளக்கி பேசினார்.
ஏற்பாடுகளை துணை முதல்வர் கோமதி, திட்ட அலுவலர்கள் பொன்மணி, நிவேதா, தாரணிதேவி செய்தனர். திட்ட அலுவலர் அமலா நன்றி கூறினார்.