/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
மருத்துவக் கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : ஜூன் 16, 2024 05:21 AM
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு கலெக்டர் ஷஜீவனா முகாமினை துவக்கி வைத்து ரத்ததானம் வழங்கினார்.
ஜூன் 14ல் உலக ரத்ததான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் ரத்த தான கொடையாளர்களுக்கு நன்றி என்ற கருப்பொருளுடன் விழிப்புணர்வு நடந்து வருகின்றன.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி முகாமில் கலெக்டருக்கு ரத்த கொடையாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் பாலசங்கர், துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட சுகாதார அலுவலர் கண்ணன், மருத்துவமனை அலுவலர் டாக்டர் செல்வக்குமார், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர்கள், பேராசிரியர்கள், ரத்த வங்கி டாக்டர்கள், நர்ஸ்கள் பங்கேற்றனர்.