/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் ஊழியரை திட்டிய படகு டிரைவர் 'சஸ்பெண்ட்'
/
பெண் ஊழியரை திட்டிய படகு டிரைவர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 03, 2024 05:19 AM
மூணாறு: மாட்டுபட்டி அணையில் மாவட்ட சுற்றுலாதுறை சார்பிலான பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அதே துறையைச் சேர்ந்த சுற்றுலா படகு டிரைவர் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அங்கு சுற்றுலா படகு டிரைவராக பணியாற்றியவர் சசி. இவர் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுடன் ஓட்டிச் சென்ற படகு குறிப்பிட்ட நேரத்தில் திரும்பவில்லை. அது குறித்து அத்துறை சார்பிலான ' டைம் கீப்பர்' ரான பெண் ஊழியர் கேட்டபோது, கோபமடைந்த சசி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அநாகரீகமாக நடந்து கொண்டார். சுற்றுலாதுறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்படி சசியை பணியில் இருந்து ' சஸ்பெண்ட்' செய்து மாவட்ட சுற்றுலா துறை செயலர் ஜிதீஷ்ஜோஸ் உத்தரவிட்டார்.