/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மார்ச் 21ல் புத்தக திருவிழா துவக்கம்
/
மார்ச் 21ல் புத்தக திருவிழா துவக்கம்
ADDED : மார் 02, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் இரு ஆண்டுகளாக புத்தகத்திருவிழா நடத்தப்பட்டது. இந்தாண்டு புத்தகத்திருவிழா நடத்துவதற்காக கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்தது. பழனிசெட்டிபட்டியில் உள்ள மேனகா மில்ஸ் மைதானத்தில் மார்ச் 21 முதல் புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மைதானத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தேனி தாசில்தார் சதீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.