/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூத் ஏஜென்டுகள் மாற மதியம் 3:00 மணிக்கு பின் அனுமதியில்லை
/
பூத் ஏஜென்டுகள் மாற மதியம் 3:00 மணிக்கு பின் அனுமதியில்லை
பூத் ஏஜென்டுகள் மாற மதியம் 3:00 மணிக்கு பின் அனுமதியில்லை
பூத் ஏஜென்டுகள் மாற மதியம் 3:00 மணிக்கு பின் அனுமதியில்லை
ADDED : ஏப் 19, 2024 05:52 AM
தேனி: ஓட்டுச்சாவடிகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளாக அமரும் பூத் ஏஜென்டுகள் மதியம் 3:00 மணிக்கு பின் வேறுநபரை மாற அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுச்சாவடிகளில் அதிகாலை 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு துவங்குகிறது. பின் 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது.
வேட்பாளர்களின் சார்பில் ஒரே நேரத்தில் ஒரு பூத் ஏஜென்ட் மட்டும் ஓட்டுச்சாவடியில் உள்ளே இருக்க அனுமதிக்கப்படும். அவருக்கு மாற்றாக வேறு ஒருவர் சிலமணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி கொள்ளலாம். பூத் ஏஜென்டுகள் அந்த பகுதியை சேர்ந்தவராக இருப்பது கட்டாயம். இவர்கள் ஓட்டுச்சாவடிக்குள் அலைபேசி பயன்படுத்தவும் அனுமதி இல்லை. ஏஜென்ட் மாறும் போது கையில் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலை ஓட்டுச்சாவடியை விட்டு வெளியே எடுத்து செல்ல கூடாது.
மதியம் 3:00 மணிக்கு பூத் ஏஜென்டாக யார் பணியில் உள்ள நபரே ஓட்டுப்பதிவு முடியும் வரை தொடர தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

