/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
87 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவக்கம்
/
87 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவக்கம்
87 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவக்கம்
87 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2024 05:06 AM
போடி : மாவட்டத்தில் 87 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் செயல்படும் உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
தேனி அருகே உப்புக்கோட்டை காந்திஜி அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த காலை உணவுத்திட்டம் துவக்க விழாவிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.
எம்.பி., தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். அங்குள்ள காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டனர்.
மாவட்டத்தில் 87 பள்ளிகளில் இத்திட்டம் நேற்று அமலுக்கு வந்தது. இதன்மூலம் 6847 மாணவர்கள் பயனடைவர்.
மாவட்டத்தில் உள்ள 426 அரசுப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்பட்டில் உள்ளது. இத்திட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துவக்கவிழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், போடி பி.டி.ஓ., தனலட்சுமி, ஊராட்சி தலைவர் மூர்த்தி, தி.மு.க,, போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.