ADDED : ஜூன் 15, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, ஜூன் 16 -
ஆண்டிப்பட்டி அருகே டி.புதூரில் தெற்கே டி.சுப்புலாபுரம் செல்லும் ரோட்டில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலை அதே ஊரைச் சேர்ந்த தங்கம் 49, நிர்வாகம் செய்து வருகிறார். ஜூன் 11 இரவு 10:00 மணிக்கு கோயிலை பார்த்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை 6:00 மணிக்கு அவரது நண்பர் குருசாமியுடன் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது முனீஸ்வரன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அக்கம் பக்கம் விசாரித்தும் உண்டியலை உடைத்து திருடியது யார் என்று தெரியவில்லை. புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
