/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிராய்லர் கோழி விலை கேரளாவில் சரிவு
/
பிராய்லர் கோழி விலை கேரளாவில் சரிவு
ADDED : ஆக 15, 2024 01:18 AM
கம்பம்:கேரளாவில் சுற்றுலா தலங்களான தேக்கடி, மூணாறில் பிராய்லர் கோழிக்கறி விற்பனை எப்போதும் அதிகமாக இருக்கும். இரு வாரங்களுக்கு முன் வரை கிலோ ரூ.160 என இருந்த விலை கடந்த சில நாட்களாக ரூ.100 ஆக குறைந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.99 க்கு விற்கப்படுகிறது.
இதன் விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் பண்ணைகளில் இருந்து கிலோ ரூ.65 க்கு கொள்முதல் செய்கின்றனர்.
கோழி எண்ணிக்கை அதிகரிக்கும் போது தீவனச் செலவும் அதிகரிக்கும். மழை காலங்களில் அவற்றின் எடையும் அதிகரிக்கும். இதற்கு காரணம் தீவனம் அதிகமாக எடுக்கும். இதனால் பிராய்லர் - கோழி விலை குறைந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவிற்கு பின் சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்ததால் இங்குள்ள பெரிய ஓட்டல்களில் பிராய்லர் கோழி வாங்குவதும் குறைந்து விட்டது.
தேனி மாவட்ட மொத்த பிராய்லர் கோழி வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில்' கேரளாவைப் போல தமிழகத்தில் விலை குறையவில்லை. நாங்கள் கிலோ ரூ.117 க்கு தருகிறோம். சில்லறை வியாபாரிகள் ரூ.125 வரை விற்கின்றனர். ஆனால் வியாபாரம் 50 சதவீதம் குறைந்துள்ளது'' என்கின்றனர்.