ADDED : ஜூலை 01, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சி கொழுஞ்சிபட்டியில் மேல்நிலை தொட்டிக்குச் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
இப்பகுதிக்கு பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் ஆகிறது.
கூடுதல் தேவைக்கு போர்வெல் நீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி விநியோகம் செய்கின்றனர்.
கொழிஞ்சிப்பட்டியில் மேல்நிலைத் தொட்டிக்குச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வெளியேறி வீணாகும் நீர் அப்பகுதியில் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.
குழாய் உடைப்பை சரி செய்து குடிநீரை பாதுகாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.