
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், அரசு நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய உதவிய அரசு அதிகாரிகள் மீது நில அபகரிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கினர்.