/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டும் குழியுமான ரோடால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
/
குண்டும் குழியுமான ரோடால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
குண்டும் குழியுமான ரோடால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
குண்டும் குழியுமான ரோடால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
ADDED : ஆக 19, 2024 01:02 AM

கூடலுார் : கூடலுாரில் இருந்து குள்ளப்ப கவுண்டன்பட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி சிரமப்படுகின்றனர்.
கூடலுாரில் இருந்து குள்ளப்பக் கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி செல்வதற்கான இணைப்பு ரோடு 4 கி.மீ., தூரம் உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கூடலுார் வழியாக சுருளி அருவிக்கு செல்ல இந்த ரோட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றன. அதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே செல்லும். இது தவிர ஒழுகுபுளி, ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் உள்ள நெல் விவசாய நிலங்களுக்கு விளைப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இந்த ரோடு அதிகம் பயன்படுகிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடு 2 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. அண்மையில் பெய்த மழையால் ரோடு அதிகமாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. ஆங்கூர்பாளையம் விலக்கு அருகே சிறு பாலத்தை ஒட்டி மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
ரோடு சீரமைப்பதுடன், மண் அரிப்பையும் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

