/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சமுதாய சுய உதவிக்குழு அலுவலகங்களில் திருட்டு
/
சமுதாய சுய உதவிக்குழு அலுவலகங்களில் திருட்டு
ADDED : ஆக 19, 2024 12:56 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராமகிருஷ்ணாபுரம், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சிகளுக்கு சொந்தமான சமுதாய சுய உதவி குழு அலுவலக கட்டடங்களில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
கதிர்நரசிங்கபுரம் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய சுய உதவி குழு அலுவலக கட்டடம் அம்மாபட்டி ரோடு அருகே செயல்படுகிறது. இங்கு பயிற்றுனராக இருந்த ஸ்ரீதேவி ஆகஸ்ட் 5 முதல் அலுவலக பணிகள் தொடர்பாக ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விட்டார். ஆகஸ்ட் 7ல் ஊராட்சிச் செயலாளர் கட்டடத்திற்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அலுவலக பயன்பாட்டிற்கு உரிய 3 பேட்டரிகள், யு.பி.எஸ்., சிப் ஆகிய உபகரணங்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. ஊராட்சிச் செயலாளர் வேல்முருகன் புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கான சமுதாய சுய உதவி குழு கட்டடம் கொழுஞ்சிபட்டி செல்லும் ரோட்டில் செயல்படுகிறது. இங்கு பயிற்றுநராக பணியாற்றி வந்த நாகஜோதி ஆகஸ்ட் 13 ல் அலுவலகத்தில் சென்று பார்த்தபோது ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அலுவலக பயன்பாட்டிற்கான 3 பேட்டரிகள், யு.பி.எஸ்., ஆகியவை திருடு போயிருந்தது. ஊராட்சி தலைவர் பழனியம்மாள் புகாரில், ராஜதானி போலீசார் இரு திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

