ADDED : ஜூன் 21, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் செந்தமான செண்டு வாரை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் சுதாகரன் 34. இருவருக்கு மனைவி, மகளும் உள்ளனர். தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றினார்.
இந்நிலையில் சுதாகரன் நேற்று முன்தினம் வீட்டினுள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதால் மனைவி, மகளை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலை வீட்டிற்கு வந்த போது கதவு உள்புறமாக தாழிட்டு இருந்தது.
அருகில் வசிப்பவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுதாகரன் தூக்கில் தொங்கினார்.
மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.