/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட கூடைப்பந்து வீரர்களுக்கு அழைப்பு
/
மாவட்ட கூடைப்பந்து வீரர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 25, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது.
இப்போட்டி திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மார்ச் 11 முதல் 19 வரை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் தேனி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கில் மார்ச் 1 காலை 7:00 மணிக்கு நடக்கிறது.
பங்கேற்கும் வீரர்கள் 2009 ஜன.,1க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 94421 51345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூடைப்பந்து கழக மாவட்ட செயலாளர் அஸ்வின்நந்தா தெரிவித்துள்ளார்.