/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நொச்சி வளர்க்க ஆர்வமா கன்றுகள் இலவசம்
/
நொச்சி வளர்க்க ஆர்வமா கன்றுகள் இலவசம்
ADDED : செப் 05, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்: நொச்சி மருத்துவ குணம் கொண்ட பயிராகும். வேலிப்பயிராகவும் பயன்படும். நொச்சி இயற்கை பூச்சி விரட்டியாகும். பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை அழிக்க பயன்படும்.
மண்ணின் வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கும், சாகுபடி செய்துள்ள பயிர் நன்றாக வளரும். எனவே வரப்பு ஓரங்களில் நொச்சியை வளர்க்க இலவசமாக நொச்சி கன்றுகள் வழங்கப்படுகிறது. சின்னமனூர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒரு விவசாயிக்கு 60 கன்றுகள் வரை இலவசமாக வழங்க உள்ளதாக உதவி இயக்குநர் பாண்டி, வேளாண் அலுவலர் கெளசிகா தெரிவித்துள்ளனர்.