/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டு வேலை தொழிலாளர்கள்நலவாரியத்தில் பதிவுசெய்ய முகாம்
/
வீட்டு வேலை தொழிலாளர்கள்நலவாரியத்தில் பதிவுசெய்ய முகாம்
வீட்டு வேலை தொழிலாளர்கள்நலவாரியத்தில் பதிவுசெய்ய முகாம்
வீட்டு வேலை தொழிலாளர்கள்நலவாரியத்தில் பதிவுசெய்ய முகாம்
ADDED : செப் 13, 2024 05:56 AM
தேனி: வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.' என, மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்காக, வீட்டுப் பணியாளர்கள் நலவாரியம்' செயல்பட்டு வருகிறது.
இவ்வாரியத்தில் தொழிலாளர்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை வேலை நாட்களில் தினமும் சிறப்பு முகாம் நடக்கிறது. எனவே பதிவு செய்யாத வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். புதிய உறுப்பினர் பதிவிற்கு அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, பள்ளிச் சான்றிழ், வங்கி புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.