/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடந்த காலங்களை நினைவுபடுத்தி தினகரன் கிராமங்களில் பிரசாரம்
/
கடந்த காலங்களை நினைவுபடுத்தி தினகரன் கிராமங்களில் பிரசாரம்
கடந்த காலங்களை நினைவுபடுத்தி தினகரன் கிராமங்களில் பிரசாரம்
கடந்த காலங்களை நினைவுபடுத்தி தினகரன் கிராமங்களில் பிரசாரம்
ADDED : மார் 29, 2024 05:57 AM

ஆண்டிபட்டி : 15 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் எம்.பி.,யாக இருந்த நான் தற்போது மீண்டும் உங்களை சந்திக்க வந்துள்ளேன் என ஆண்டிபட்டி கிராமங்களில் பேசி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பிரசாரம் செய்தார்.
ஆண்டிபட்டி ஒன்றியம், குன்னூரில் துவங்கி அரப்படித்தேவன்பட்டி, க.விலக்கு, ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், டி.புதூர், ஏத்தக்கோயில், மறவபட்டி, கன்னியப்பபிள்ளை பட்டி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினகரன் பேசியதாவது:
காலம் மீண்டும் என்னை உங்களுடன் சேர்த்துள்ளது. என்னை மறக்காமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாக வரவேற்கிறீர்கள். தி.மு.க.,வை ஒழிக்க எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சி இரட்டை இலை சின்னம். இன்று வில்லன் பழனிசாமி கையில் உள்ளது. அவரை நான் முதல்வர் ஆக்கினேன். அவர் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் ஜெயலலிதா உருவம் பொறித்த கொடியுடன் கட்சி துவக்கினேன். குக்கர் சின்னத்தில் ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள்.
அதே குக்கர் சின்னத்தில் ஓட்டு கேட்டு 15 ஆண்டுக்குப்பின் வந்துள்ளேன். தமிழகத்தில் போதை கலாச்சாரம் பெருகி விட்டது. தி.மு.க.,வினரே அதனை செய்கின்றனர். மோடி 3ம் முறையாக மீண்டும் பிரதமராக உங்களிடம் குக்கர் சின்னத்தில் ஓட்டு கேட்கிறேன். நமது தொகுதிக்கும் தமிழகத்திற்கும் தேவையான திட்டங்களை பிரதமர் மோடியிடம் பெற்று உங்களுக்கு கிடைக்கச் செய்வேன் என பேசினார்.
ஏத்தக்கோயில், மறவபட்டியில் பிரசார வேனில் இருந்து இறங்கி அங்குள்ள நாடக மேடையில் ஏறி பொதுமக்களுடன் உரையாடினார்.
அனைத்து இடங்களிலும் பெண்கள் பலர் குக்கரை தலையில் சுமந்தபடி கூட்டத்தில் இருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் 15 ஆண்டுக்கு முன் பல அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ததை நினைவுபடுத்தினார்.

