/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மேலாண்மைக்குழு தேர்தலில் அரசியல் தலையீடு தவிர்க்கப்படுமா! பார்வையாளர்கள் கண்காணிக்க பெற்றோர் வலியுறுத்தல்

ADDED : ஆக 13, 2024 12:37 AM
தேனி : ‛மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வில் அரசியல் தலையீடு தவிர்த்து முறையாக தேர்தல் நடத்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும், துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி.,) நிர்வாகிகளின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைகிறது. அடுத்து 2024- 2026 ஆண்டு பதவி காலத்திற்கான பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆக., 10ல் 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளன. மீதம் உள்ள 50 சதவீத பள்ளிகளுக்கு ஆக., 17 ல் நடக்க உள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆக., 24லும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆக., 31லும் நடக்க உள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள், ஆலோசனை நடத்தி பள்ளிக்கு தேவையான வகுப்பறை, மைதானம், கட்டட பராமரிப்பு, மாணவர்களின் நலன் பற்றிய விபரங்களை 'எமிஸ்' இணையத்தளத்தில் முறைப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் அப்பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை பள்ளிக் கல்வித்துறை வழங்கும். மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் முறையாக நடக்காத பட்சத்தில் பெற்றோர் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டி ஒன்றியம், கதிர்நரசிங்கபுரம் அரசு துவக்கப்பள்ளியில் நிர்வாகிகள் தேர்வு அரசியல் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது. இதுபோல் ஒருசில பள்ளிகளில் நிர்வாகிகள் தேர்வில் அரசியல் தலையீடு உள்ளதாக புகார் எழுகிறது. எனவே, எதிர்வரும் பள்ளிகளின் தேர்தல்களையும் அரசியல் தலையீடு இன்றி முறைப்படி நடத்திட நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.