/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரசாரத்திற்கு குறுகிய நாட்களால் தேர்தல் அலுவலகங்கள் 'வெறிச்' ஓட்டு சேகரிப்பை விரைவுபடுத்தும் வேட்பாளர்கள்

ADDED : ஏப் 01, 2024 11:55 PM
ஆண்டிபட்டி : லோக்சபா தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களுக்கு தொண்டர்கள் அடிக்கடி வந்து செல்லாததால் வெறிச்சோடி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. தேனி தொகுதி தி.மு.க.,வில் தங்க தமிழ்ச்செல்வன், அ.ம.மு.க.,வில் தினகரன்,அ.தி.மு.க.,வில் நாராயணசாமி நாம் தமிழர் கட்சியில் மதன் ஆகியோர் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக்காக ஒவ்வொரு கட்சி சார்பில் சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகங்கள் செயல்படும். ஆண்டிபட்டியில் பா.ஜ., அ.தி.மு.க., அ.ம.மு.க., சார்பில் தேர்தல் பணிக்காக தற்காலிக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் கிராமங்களில் இருந்து தேர்தல் பணிக்கு வரும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் தங்கி பணி மேற்கொள்வார்கள். தொண்டர்களுக்கான செலவுகளை கட்சி நிர்வாகிகள் கவனித்துக் கொள்வர்.
தற்போது தேர்தல் கமிஷன் கெடுபடியால் அரசியல் கட்சிகளின் பிரசார உத்திகள் மாறிவிட்டன. பிரசாரத்திற்கு குறுகிய நாட்களே இருப்பதால் தொகுதியின் அனைத்து பகுதிகளையும் கவரேஜ் செய்வதில் சிரமம் உள்ளது. இதனால் கட்சி அலுவலகங்களுக்கு வேட்பாளர்கள், வி.ஐ.பி.,க்கள் வருகையும் இல்லை. கட்சிகளில் தீவிரமாக பணியாற்றும் தொண்டர்கள், நிர்வாகிகளை கொண்டுள்ள பூத் கமிட்டி அந்தந்த பகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.
தகவல் தொடர்புகள் அனைத்தும் மொபைல் மூலம் தொடர்வதால் கிராமங்களில் இருந்து ஆண்டிபட்டியில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு தொண்டர்கள் வந்து செல்ல அவசியம் ஏற்பட வில்லை.இதனால் கட்சி தேர்தல் அலுவலகங்கள் ஆண்டிபட்டியில் வெறிச்சோடி உள்ளது.