/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் ஒரே திட்டத்தை கூறி ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள்
/
இடுக்கியில் ஒரே திட்டத்தை கூறி ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள்
இடுக்கியில் ஒரே திட்டத்தை கூறி ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள்
இடுக்கியில் ஒரே திட்டத்தை கூறி ஓட்டு சேகரிக்கும் வேட்பாளர்கள்
ADDED : ஏப் 13, 2024 02:29 AM

மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் ஒரே திட்டத்தை எடுத்துக் கூறி காங்கிரஸ், இடதுசாரி, பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்கின்றனர்.
இடுக்கி லோக்சபா தொகுதியில் காங்., கூட்டணியில் ' சிட்டிங்' எம்.பி. டீன் குரியாகோஸ், இடது சாரி கூட்டணியில் ஜோய்ஸ்ஜார்ஜ், பா.ஜ. கூட்டணியில் பி.டி.ஜே.எஸ். அமைப்பைச் சேர்ந்த சங்கீதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு 14 நாட்கள் (ஏப்.26) உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்திலும், ஓட்டு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
மூவருடைய தேர்தல் பிரசாரத்திலும் கொச்சி, தனுக்கோடி தேசிய நெடுஞ்சாலை முக்கிய இடம் பிடித்துள்ளது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே 42 கி.மீ., தூரம் ரூ.381.76 கோடி செலவில் இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்டது. அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல தரத்துடன் ரோடு அமைக்கப்பட்டுள்ளதால் திட்டம் வெகுவாக கவர்ந்தது.
அந்த திட்டத்தை தான் மூன்று வேட்பாளர்களும் சொந்தம் கொண்டாடும் வகையில் பிரசாரத்தில் முன் வைக்கின்றனர்.
2017 நம்பரில் திட்டம் துவங்கியபோது ஜோய்ஸ்ஜார்ஜ் எம்.பி.யாக இருந்ததால் அதனை முன்வைத்து பிரசாரம் நடக்கிறது. திட்டம் கடந்த ஜன.5ல் அதிகாரபூர்வமாக பயன்பாட்டிற்கு வந்ததால் சிட்டிங் எம்.பி. டீன் குரியாகோஸ்க்கு பங்குள்ளதாக கூறுகின்றனர்.
அதேசமயம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு என்பதால் பா.ஜ.கூட்டணி வேட்பாளர் சங்கீதாவின் தேர்தல் பிரசாரத்திலும் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

