/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்
/
தேனி தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்
தேனி தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்
தேனி தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்
ADDED : ஏப் 18, 2024 06:14 AM

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் நேற்று மாலை 6:00 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானது தேனி தொகுதியில் பிரசாரம் களை கட்ட துவங்கியது. அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனை ஆதரித்து பா.ஜ,., மாநில தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் வாசன், தினகரன் மனைவி அனுராதா தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.நேற்று மாலை தினகரன் உசிலம்பட்டியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி., உள்பட பலர் பிரசாரம் செய்தனர். நேற்று காலையில் தேனி அருகே பொம்மையக் கவுண்டன்பட்டியில் பிரசாரத்தை துவக்கி அல்லிநகரம், சமதர்மபுரம், பங்களாமேடு, கருவேல்நாயக்கன்பட்டி வரை பிரசாரம் செய்தார்.
மாலையில் தனது சொந்த ஊரான நாராயணத்தேவன்பட்டியில் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று பிள்ளையார் கோயில் அருகே பிரசாரத்தை முடித்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து கட்சிபொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் பிரசாரம் செய்தனர். நேற்று காலையில் சோழவந்தான் தொகுதியில் பிரசாரத்தை துவங்கி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் தொகுதிகளில் பிரசாரம் செய்தார், மாலை போடி போஜன் பார்க்கில் பிரசாரத்தை துவக்கி, கட்டபொம்மன் சிலை, காமராஜர் பஜார், ஜி.ஹெச். ரோட்டில் பிரசாரம் செய்து, மாலை 5:55 மணிக்கு வ.உ.சிதம்பரனார் சிலை அருகே பிரசாரத்தை நிறைவு செய்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் மதனை ஆதரித்து கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
நேற்று காலை பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி, ஜி.கல்லுபட்டி, தேவதானப்பட்டியில் மதியம் 3:00 மணிக்கு நிறைவு செய்தார்.

