/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்றத்தில் சரணடைந்த கஞ்சா வியாபாரி சிறையில் அடைப்பு
/
நீதிமன்றத்தில் சரணடைந்த கஞ்சா வியாபாரி சிறையில் அடைப்பு
நீதிமன்றத்தில் சரணடைந்த கஞ்சா வியாபாரி சிறையில் அடைப்பு
நீதிமன்றத்தில் சரணடைந்த கஞ்சா வியாபாரி சிறையில் அடைப்பு
ADDED : பிப் 27, 2025 01:26 AM

தேனி; கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி பெரியகுளம் தாலுகா சக்கரபட்டி மனோஜ்குமார் 35, தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவில் அவர் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மாதம் போதை பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அல்லிநகரம் பொம்மைய கவுண்டன்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த நித்திஸ்குமார் 25, கைலாசப்பட்டி பரத் 22, ஆகிய இருவர் போலீசாரிடம் சிக்கினர்.
மனோஜ்குமார் தப்பி ஓடினார். இருவரையும் கைது செய்து,1.25 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இருவரும் விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தப்பி ஓடிய மனோஜ்குமார், நேற்று தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிபதி ஜெயமணி உத்தரவில், அவரை போலீசார் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.