ADDED : பிப் 26, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே நல்ல தண்ணி எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனை சேர்ந்தவர் அஜய்பிரான்சிஸ் 21.
இவர், நேற்று முன்தினம் இரவு நகரில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் கஞ்சா விற்பனை நடத்தினார். தகவல் அறிந்த மூணாறு எஸ்.ஐ.அஜேஷ் கே. ஜான் தலைமையில் போலீசார் அஜய்பிரான்சிஸ்சை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 30 பொட்டலங்களை கொண்ட 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அஜய் பிரான்சிஸ்சை கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் அனுப்பி வைத்தனர்.