ADDED : ஏப் 13, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறில் காலனி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடைக்கு எதிரே மரம் முறிந்து விழுந்து இரண்டு கார்கள் சேதமடைந்தன. அங்கு இருந்த காய்ந்த த மரம் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு திடீரென முறிந்து விழுந்தது.
அதில் ரோட்டில் நிறுத்தி இருந்த டோபி காலனியைச் சேர்ந்த முகம்மதுரபீக், தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆகியோரின் கார்கள் சேதமடைந்தன.
அதன் எதிரே அரசு மதுபான கடை உள்ளதால் பகலில் ஆட்கள் நடமாட்டம் கூடுதலாக காணப்படும். சம்பவம் நடந்தபோது ஆட்கள் நடமாட்டம் குறைவு என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

