/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனுமதியின்றி ஊர்வலம் 26 பேர் மீது வழக்கு
/
அனுமதியின்றி ஊர்வலம் 26 பேர் மீது வழக்கு
ADDED : செப் 09, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் மெயின் ரோடு முனியாண்டி. இவரது வீட்டில் சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன், கார்த்திக், ராதாகிருஷ்ணன், ரெங்கநாதன் உட்பட 28 பேர் சட்டவிரோதமாக ஒன்று கூடி, முன் அறிவிப்பு, போலீசார் அனுமதி இன்றி 3 அடி விநாயகர் சிலையை துாக்கி வாகனத்தில் ஏற்றி, முல்லையாற்றில் கரைப்பதற்காக ரோட்டை மறித்து பொது மக்களுக்கு இடையூறு செய்தனர்.
இவர்கள் மீது வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.