ADDED : ஜூன் 26, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பங்களாமேட்டில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ததாக வீ.ஏ.ஓ., ஜீவா புகாரில் அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் ராமர், ஜக்கையன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மகளிரணி மாவட்டச் செயலாளர் தனலட்சுமி, உள்ளிட்ட 507 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.