/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., பிரசாரத்திற்காக ரோடு சேதம் நகர செயலாளர் மீது வழக்கு
/
தி.மு.க., பிரசாரத்திற்காக ரோடு சேதம் நகர செயலாளர் மீது வழக்கு
தி.மு.க., பிரசாரத்திற்காக ரோடு சேதம் நகர செயலாளர் மீது வழக்கு
தி.மு.க., பிரசாரத்திற்காக ரோடு சேதம் நகர செயலாளர் மீது வழக்கு
ADDED : மார் 25, 2024 05:52 AM

தேனி தேனியில் உதயநிதி பிரசாரத்திற்காக ரோட்டின் இருபுறமும் குழிகள் தோண்டி சேதப்படுத்தப்பட்டன.விதி மீறிய தி.மு.க., நகர செயலாளர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
தேனியில் நேற்று காலை தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்தஅமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார். அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பங்களா மேடு பகுதியில் இருபுறங்களிலும் தி.மு.க., சார்பில் ரோட்டில் டிரில்லர் இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டி கொடிகம்பங்கள் ஊன்றப்பட்டன.
பிரபலங்கள் பிரசாரத்தின் போது ரோட்டினை சேதப்படுத்தாமல் கொடிகம்பங்கள் ஊன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் பள்ளங்களினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
விதி மீறிய இருவர் மீது வழக்கு
பெரியகுளம் தொகுதி தேர்தல் கண்கணிபபு குழு தலைவர் நவநீதபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள், தேனியில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து ஆய்வு செய்தனர். ரோட்டில் சென்டர் மீடியன், இருபுறங்களிலும் தி.மு.க., கொடிகம்பங்கள் தார்ரோட்டை டிரில் கருவியால் துளையிட்டு கம்பம் நட்டு கொடி கட்டியிருந்தனர். புகாரில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, அன்னப்பாளையம் வினோத், தி.மு.க., நகர செயலாளர் நாராயணபாண்டியன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

