/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருதரப்பு தகராறில் நால்வர் மீது வழக்கு
/
இருதரப்பு தகராறில் நால்வர் மீது வழக்கு
ADDED : ஆக 13, 2024 11:35 PM
தேனி: தேனி அல்லிநகரம் தெற்கு மாடசாமி தெரு அரசாங்கம் 30. இவருக்கும் அதேப்பகுதி ராஜேஷ், அழகர்சாமி காலனி முதல் தெரு முருகன், அல்லிநகரம் ஹைஸ் கூல் தெரு ராமச்சந்திரன், காளியம்மன் கோயில் தெரு முத்துப்பாண்டி ஆகிய நால்வருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. ஆக., 11ல் அரசாங்கம், வீரப்ப அய்யனார் கோயில் அருகே குளிக்க சென்றார். டூவீலரில் சென்றபோது, நால்வரும் வழிமறித்து ரூ.20 ஆயிரம் கொடு என மிரட்ட, முருகன் அரசாங்கத்தை முகத்தில் குத்தியதில் பல் உடைந்தது.
பின் மூவரும் அவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அரசாங்கம் தேனி அரசு மருத்துவக கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரில் அல்லிநகரம் போலீசார் முருகன், ராமச்சந்திரன், முத்துப்பாண்டி, ராஜேஷ் ஆகிய நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.