ADDED : ஆக 03, 2024 05:16 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீ சக்தி, இவரது மனைவி நிஷாந்தி 19, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவர் ஸ்ரீசக்தி தினமும் குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து நிஷாந்தி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சில நாட்களுக்கு முன் புகார் செய்தார். இந்நிலையில் ஸ்ரீ சக்தியின் தாத்தா கருதப்பாண்டி, தந்தை துரைப்பாண்டி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த நிஷாந்தியை வீட்டை விட்டு விரட்டி உள்ளனர். கணவர் கம்பியால் நிசாந்தியை தாக்கியதில் காயம் அடைந்தார்.
மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து நிஷாந்தி ராஜதானி போலீசில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் கணவர் ஸ்ரீ சக்தி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.