ADDED : செப் 02, 2024 12:13 AM
தேனி: தேனி ரத்தினம் நகர் முகமது யாசிப் 28. இவருக்கும் வெங்கலா நகர் சிபானா பாத்திமாவுக்கும் 28, திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.
சிபான பாத்திமாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 11 வயதில் மகன் உள்ளார். முகமதுயாசிப்பை இரண்டாவது திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும்,இருமாத பெண் குழந்தையும் உள்ளது. இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் சிபானபாத்திமா வெங்கலா நகரில் உள்ள தாய் வீட்டிற்கு 20 நாட்களுக்கு முன் சென்றார்.
இந்நிலையில் வெங்கலா நகரில் மாமியார் வீட்டிற்கு சென்ற முகமதுயாசிப், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
மனைவி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரித்து, ஜமாத் அல்லது குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறக் கூறி அனுப்பினார். சிபானா பாத்திமா எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
எஸ்.பி., உத்தரவில் அல்லிநகரம் போலீசார் முகமது யாசிப் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.