ADDED : ஜூலை 17, 2026 09:24 PM
அ நிறம் | அளவு
தேனி,ஜூலை 18
ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ராயப்பர் தெரு ராஜ்குமார் ஆசிரியராக பணிபுரிகிறார்.
மாணவர் படை அலுவலராகவும் உள்ளார். அந்த பள்ளியில் நடந்த பாராட்டு விழாவின் போது மாணவர்களை வரிசைப்படுத்துவதில் ராஜ்குமார், மற்ற ஆசிரியர்கள் முத்து, மற்றொரு ராஜ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர் படை ஆசிரியர் ராஜ்குமாரை ஆசிரியர்கள் முத்து, மற்றொரு ராஜ்குமார் இணைந்து திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். மாணவர்படை ஆசிரியர் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். புகாரில் ஆசிரியர்கள் முத்து, மற்றொரு ராஜ்குமார் மீது ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
