ADDED : மே 04, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் 38. இவர் போடி அரசு பொறியியல் கல்லூரி எதிரே உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் முரளி என்பவரின் டூவீலரை எடுத்துச் சென்றுள்ளார். நேற்று கடை முன்பாக டூவீலர் நிறுத்தி விட்டு கடையில் வேலை செய்துள்ளார். அப்போது கடைக்கு வந்த முரளி இரண்டு நாட்களாக எங்கு சென்றாய் என கேட்டு, திட்டி கம்பால் அடித்து காயப்படுத்தினார். ரத்தினவேல் பாண்டியன் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போடி தாலுாகா போலிசார் முரளி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.