/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மத உணர்வை துாண்டும் பதிவு மூவர் மீது வழக்கு: ஒருவர் கைது
/
மத உணர்வை துாண்டும் பதிவு மூவர் மீது வழக்கு: ஒருவர் கைது
மத உணர்வை துாண்டும் பதிவு மூவர் மீது வழக்கு: ஒருவர் கைது
மத உணர்வை துாண்டும் பதிவு மூவர் மீது வழக்கு: ஒருவர் கைது
ADDED : ஜூன் 23, 2024 09:21 AM

தேனி: தேனி மாவட்டத்தில் மத உணர்வை துாண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
மத உணர்வை துாண்டும் வகையில் கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக வலைதள கண்காணிப்பு குழு மூலம் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதன்படி மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்ட கம்பம் சசிக்குமார், உத்தமபாளையம் ராம்செல்வா, கம்பம் முகமதுசாதிக் ஆகியோர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்தனர்.
இதில் விசாரணைக்கு ஆஜாராக கோரி முகமது சாதிக்கிற்கு இரு முறை அழைப்பு அனுப்பினர். ஆஜாராகாத இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணை செயலாளரான முகமது சாதிக்கை நேற்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சமூக வலைதளங்களில் ஜாதி,மத உணர்வுகளை துாண்டும் விதமாக கருத்து பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.