/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
/
நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 01, 2025 03:02 AM
தேனி: தேனியில் நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வாங்கித் தருவதாக 8 பேரிடம் ரூ.58 லட்சம் பெற்று போலி பணி உத்தரவை வழங்கி மோசடி செய்த அல்லிநகரம் சுருளி, அவரது மனைவி லட்சுமி, உறவினர்கள் வேல்முருகன், குமார் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேனி அல்லிநகரம் மணிகண்டன் 58. இவரது மகன் ஜீவானந்தம் 27. இவர் பி.காம்., பட்டதாரி. இவருக்கு 2020ல் அரசு வேலை பெற மணிகண்டன் முயன்றார்.
இதையறிந்த உறவினரான அல்லிநகரம் கம்போஸ்ட் ஓடைத்தெரு சுருளி, 'தனக்கு அரசு அதிகாரிகளை தெரியும். பணம் கொடுத்தால் நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வாங்கித் தருகிறேன்,'' என்றார். அதை நம்பி மணிகண்டன் ரூ.8 லட்சத்தை அவரிடம் வழங்கினார்.
பின் சுருளி, அவரது மனைவி லட்சுமி, உறவினர்கள் வேல்முருகன், குமார் ஆகியோர் இணைந்து மணிகண்டன் வீட்டிற்கு சென்று government Pleader office Block என்ற தலைப்பில் ஜீவனாந்தம் பெயரில் பணி உத்தரவை வழங்கி மேலும் ரூ.2 லட்சம் வழங்க வலியுறுத்தினர்.
பின் நால்வரும், மணிகண்டன் அவரது மகனை நம்ப வைக்க தலா ரூ.17 ஆயிரம் சம்பளத்தொகையை மகன் வங்கிக் கணக்கில் செலுத்தினர்.
மணிகண்டன் விசாரித்த போது ஜீவானந்தத்திற்கு வழங்கப்பட்ட பணி உத்தரவு போலியானது என தெரிந்தது. இதுகுறித்து கேட்ட மணிகண்டனுக்கு நால்வரும் கொலை மிரட்டல் விடுத்தனர். நால்வரும் மேலும் 7 பேரிடம் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.58 லட்சம் ஏமாற்றியது தெரிந்தது.
மணிகண்டன் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மதுரைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் கிளை உத்தரவின்படி சுருளி, மனைவி லட்சுமி, வேல்முருகன், குமார் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.