/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகள், உறவினர் மீது வழக்கு
/
தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகள், உறவினர் மீது வழக்கு
தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகள், உறவினர் மீது வழக்கு
தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகள், உறவினர் மீது வழக்கு
ADDED : மே 02, 2024 05:55 AM
தேனி: தேனியில் தாய் லட்சுமியை தாக்கி கணவர் ராமகிருஷ்ணன், தந்தை ராஜேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சுசி 21, இவரது உறவினர் மதன்குமார் 31,மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோட்டூர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுசி 21. இவர்களுக்கு 2 வயது மகள் உள்ளார். சுசி அம்மச்சியாபுரத்தில் உள்ள தந்தை ராஜேஸ்வரன் வீட்டிற்கு வந்து சென்ற போது, சகோதரன் முறை உள்ள மதன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை சுசி குடும்பத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் குழந்தை, கணவரை விட்டு விட்டு மதன்குமாருடன் சுசி வீட்டை விட்டு வெளியேறி அல்லிநகரத்தில் வசித்தனர். சுசியை அழைத்து செல்ல அவரது கணவர் ராமகிருஷ்ணன், தாய் லட்சுமி, தந்தை ராஜேஸ்வரன் ஆகியோர் சென்றனர்.
அப்போது சுசி, தாய் லட்சுமியை அசிங்கமாக பேசி தாக்கினார். மதன்குமார் மூவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். லட்சுமி புகாரில் சுசி, அவரது சகோதரர் முறை உறவினரான மதன்குமார் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

