/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடமாநில நபரை தாக்கியவர் மீது வழக்கு
/
வடமாநில நபரை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : மார் 09, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : புனே தீபக் நபர் தயாதி ரோட்டை சேர்ந்த புஷன் 34. இவர் மூணாறு சுற்றுலா சென்று விட்டு ஊருக்கு செல்ல, பஸ்சில் தேனிக்கு வந்து கொண்டிருந்தார்.
போடியில் பஸ்சில்ஏறிய நபர், புஷனின் அருகில் அமர்ந்து உரசிக்கொண்டே வந்தார். அவரை தள்ளி அமர புஷன் கூறினார்.
இதற்காக கோபம் அடைந்த நபர், மோதிர கையால், புஷனின் முகத்தில் குத்தி காயப்படுத்தினார்.
தகராறு குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க பஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டின் அருகே நின்ற போது, தாக்கிய நபர் தப்பித்து ஓடிவிட்டார்.
முகத்தில் காயப்பட்ட புஷன்மருத்துவ சிகிச்சை பெற்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.