/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடப்பிரச்னையில் தகராறு 11 பேர் மீது வழக்குப்பதிவு
/
இடப்பிரச்னையில் தகராறு 11 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 27, 2024 05:00 AM
ஆண்டிபட்டி : மயிலாடும்பாறை அருகே சோலைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் பச்சைப்பாண்டி 39, இவரது வீடு அருகே வசிப்பவர் கணேசன் 50, இவர்களின் வீடு அருகே இடப்பிரச்னை இருந்துள்ளது.
நேற்று முன் தினம் பச்சைபாண்டி மனைவி முருகேஸ்வரி தனது வீடு அருகே முட்களால் வேலி அமைத்துள்ளார்.
இதற்கு கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் முருகேஸ்வரி சௌந்தரபாண்டியன், கணேசன் மனைவி ஜெயா ஆகியோர் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
முருகேஸ்வரி புகாரில் சோலைத்தேவன்பட்டியை சேர்ந்த கணேசன் அவரது உறவினர்கள் முத்தமிழ்செல்வன், வனராஜ், பிரகாஷ், ஜெயா ஆகியோர் மீதும், ஜெயா புகாரில் பச்சைபாண்டி, பிரவீன் குமார், முருகேஸ்வரி,சௌந்தரபாண்டி, மதன்குமார், வெண்ணிலா ஆகியோர் மீதும் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.