/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழர்கள் ஜாதி சான்றிதழ் விவகாரம்; அமைச்சர்கள் ஜூலை 17ல் ஆலோசனை
/
தமிழர்கள் ஜாதி சான்றிதழ் விவகாரம்; அமைச்சர்கள் ஜூலை 17ல் ஆலோசனை
தமிழர்கள் ஜாதி சான்றிதழ் விவகாரம்; அமைச்சர்கள் ஜூலை 17ல் ஆலோசனை
தமிழர்கள் ஜாதி சான்றிதழ் விவகாரம்; அமைச்சர்கள் ஜூலை 17ல் ஆலோசனை
ADDED : ஜூலை 06, 2024 05:55 AM
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களுக்கு ஜாதி சான்றிதழ் பெற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து ஜூலை 17ல் அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
இம்மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
தேயிலை, ஏலம் ஆகிய தோட்டங்களில் பல தலைமுறைகளாக வேலை செய்கின்றனர்.
இவர்கள் ஜாதி சான்றிதழ் பெற 1950க்கு முன்பாக கேரளாவில் குடியேறியதற்கான ஆவணங்கள் கட்டாயமாக்கி அரசு கட்டுப்பாடு விதித்ததால் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் சான்றிதழ் பெற இயலாத நிலை ஏற்பட்டு மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் சிறுபான்மையிரான தமிழர்களின் பிள்ளைகள் எதிர் காலம் கேள்விக் குறியானது.
பிரச்னை முற்றியதால் தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா ஜாதி சான்றிதழ் விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அது குறித்து வருவாய், சட்டம், கல்வி, ஆத்திராவிடர், பழங்குடியினர் நலம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் ஜூலை 17ல் ஆலோசனை நடத்துகின்றனர்.