/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி தற்காலிக உணவு கடைகளுக்கு சான்றிதழ்
/
வீரபாண்டி தற்காலிக உணவு கடைகளுக்கு சான்றிதழ்
ADDED : மே 07, 2024 06:07 AM
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஸ்குமார், தேனி உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் பயிற்சி வழங்கினர்.
உணவுப்பொருட்களில் நிறமிகள் சேர்க்க கூடாது, திறந்தவெளியில் வைக்க கூடாது, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகிக்க கூடாது, உணவுத்தயாரிப்பில் சுகாதார மான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமீறி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
தரம் குறைந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
பயிற்சியில் கடைகளுகான் தற்காலிக உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் வழங்கப்பட்டது.