ADDED : மே 10, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 7 ல் துவங்கியது.
பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம்கண் பானை, அலகு குத்துதல், காவடி எடுத்தும், சேத்தாண்டி வேடமணிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை 5:00 மணிக்கு நடக்கிறது.
விழாவில் கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத் பங்கேற்கின்றனர். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.