/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செஸ் போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
/
செஸ் போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 08, 2025 04:03 AM

ஆண்டிபட்டி : திருப்பத்தூரில் நடந்த சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்ற ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ. மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீவர்ஷன், யோகேஷ்பாண்டி, செந்தில்குருவேந்தன் ஆகியோர் சர்வதேச போட்டிக்கான ரேட்டிங் அந்தஸ்து பெற்றுள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
திருப்பத்தூரில் நடந்த சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 14 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கான போட்டியில் இப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான ரேட்டிங் அந்தஸ்து பெற்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் முதல்முறையாக சர்வதேச விளையாட்டு அந்தஸ்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வச்சிரவேல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.