ADDED : ஆக 02, 2024 06:49 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தெப்பம்பட்டி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. தேனி கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மகாராஜன் முன்னிலை வகித்தார்.
ஆண்டிபட்டி ஒன்றியம் ரெங்கசமுத்திரம், பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கொத்தப்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கான சான்று, வாரிசு சான்று கேட்டும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் பயனாளிகளாக சேர்க்க விண்ணப்பம் செய்தனர். அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் அலுவலர்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களின் விண்ணப்பங்களை பரிசீலித்தனர். முகாம் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், பி.டி.ஓ., சந்திரபோஸ், அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.