/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெரு நாய் கடித்து சிறுவர்கள் காயம்
/
தெரு நாய் கடித்து சிறுவர்கள் காயம்
ADDED : செப் 22, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, : மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் கொட்டாக்கொம்பூரில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் தெரு நாய் கடித்து பலத்த காயம் அடைந்தனர்.
கொட்டாக்கொம்பூரில் தெருநாய்கள் ஏராளம் உள்ளதால் மக்கள் கடும் அச்சத்துடன் நடமாடுகின்றனர். அப்பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5, 8, 10 வயதுடைய மூன்று சிறுவர்களை தெருநாய் கடித்தது. அதில் பலத்த காயமடைந்த மூவரையும் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். கொட்டாக்கொம்பூரில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.