/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் குறுவட்ட தடகள போட்டிகள்
/
சின்னமனுார் குறுவட்ட தடகள போட்டிகள்
ADDED : ஆக 30, 2024 05:57 AM

சின்னமனூர் : சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட தடகள போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளை ஒடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தியது.
குறுவட்ட தடகள போட்டிகளை ஓடைப்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் மனோகரன் , தற்போதைய தலைவர் தனுஷ்கோடி ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 23 பள்ளிகளில் இருந்து 643 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 100 மீ., 200 மீ, 400மீ, 800மீ, 1500 மீ, 3000 மீட்டர் ஒட்ட போட்டிகள், - உயரம்,நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது . 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளக்கு முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் ஒருங்கிணைத்தார்

