/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு
/
சின்னமனுார் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு
ADDED : செப் 11, 2024 12:41 AM
சின்னமனுார் : சின்னமனுாரில் நேற்று முன்தினம் மாலை நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் மார்க்கையன் கோட்டையில் இரு பிரிவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சின்னமனுாரில் ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. முத்தாலம்மன் கோயில் அருகில் இருந்து ஹிந்து முன்னணி சார்பில் ஊர்வலம் துவங்கியது. மாவட்ட பா.ஜ., தலைவர் பாண்டியன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் பால முருகன், சுந்தர், நகர் பா.ஜ., தலைவர் லோகேந்திரராசன் பங்கேற்றனர். கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது. எழுச்சி முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ரவி, ராமராஜ் உட்பட நகர் நிர்வாகிகள் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து முல்லைப் பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. சின்னமனுாரில் 123 விநாயகர் சிலைகள் இரண்டு அமைப்புகள் சார்பிலும் கரைக்கப்பட்டன.
புலிகுத்தி, மார்க்கையன் கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்தன.
மார்க்கையன் கோட்டையில் ஒரு பிரிவினர் ஆற்றில் கரைத்து விட்டு திரும்பும் போது, எதிரில் வந்த மற்றொரு பிரிவினமுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பந்தல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இது தொடர்பாக சின்னமனுார் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

